சினுங்கல்
உன் சிறிய சிணுங்களில்
நான் சிதறி போகிறேன்
உன் விழியோர அசைவினில்
விழுந்து போகிறேன்
இதழோர சிரிப்பில்
இரக்கமே இல்லாமல்
கொல்கிறாயடி.
தொலைந்து போன
என்னை எங்கே
என்று தேடுவேனடி.
ஏக்கத்தின் எண்ணிக்கை
எல்லை தாண்டி சென்றுவிட்டதடி.
கடிகார நொடி முள்ளாய்
காலமெல்லாம் சுற்றி வருவேனடி.