சாதி ஒழி மதம் அழி பொங்கல் போட்டி 2015
தை நாளின் முன்னாளில்
பழையதை அழிக்கும் போகியில்
நம் மன அழுக்கில் இருக்கும்
சாதிக் குப்பையையும்
தீயிட்டு கொளுத்து...!!!
சாதியால் நிகழும்
காதல் பிரிவையும்
கௌரவ கொலைகளையும்
சாபமிட்டு விரட்டி விடு...!!!
மனிதனை மதமாய் பார்க்கும்
மண்புதை எண்ணம் மறைத்து
மானுடம் வளர்க்கும்
மனிதம் வளரவிட்டு
மக்களை மக்களாய் வாழ விடு...!!!