நட்பானவன்

பால்ய கால
நண்பனின் மரணம்

என் இதய பாசிகளை
துடைத்து என்னை
தூய்மை ஆக்கியவன்.

இதயத்தின்
ஆரிகலாகவும்
வென்றிகலாகவும்
இருந்தவன்.

உயிரோடு
இருக்கும் வரை
என் உயிர்
உணர்வுகளின்
உடைமையானவன்.

மரணத்தின் மூலம்
இதய துடிப்பை
சில நொடிகள்
நிறுத்தியவன்.

உயிரோடு
இருக்கும் போதே
செயலிழந்த
உடல் உருப்பானவன்.

திடீரென
நின்று போன
காற்று மண்டலம்
போன்றவன்.

நண்பனின் மரணம் -
நம் வாழ்க்கை
ஏடுகளின்
சில பக்கங்களை
இழந்து தேடுவது.....

எழுதியவர் : மதுராம் (17-Dec-14, 8:13 pm)
பார்வை : 244

மேலே