நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015
நாளைய தமிழும் தமிழரும் (பொங்கல் கவிதை போட்டி 2015)
அணுவினைத் துளைத்து ஏழ்கடல் புகுத்தும்
அறிவினைக் கொடுத்த அருந்தமிழ் மொழியே!
தமிழர் தம் பெருமையைத் தரணியில்
நிலைக்கச் செய்த தாய்த்தமிழ் மொழியே!
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோம் - உனக்கோர்
பங்கம் வரின் எவ்வாறு பார்த்திருப்போம்
செந்தமிழ் பேசிய காலம் போனது
கொடுந்தமிழும் கொடுமைத் தமிழ் ஆனது!
நதிகள் பலவாயினும் சேருமிடம் கடலாகும்
மொழிகள் பலவாயினும் தமிழ்மொழியே - நம்தாயாகும்
உலகிற்கே வழிகாட்டாம் உலகப்பொதுமறை - அது
பறைசாற்றாதோ நம் தமிழ்ப் பெருமை(யை)!
பிறமொழிக் கலப்பால் தமிழ் மெல்லச் சாவதோ
பிள்ளைகள் நாமிருக்க அன்னைமொழி அழிவதோ!
இனியேனும் விழித்திடு தமிழா - உயர்
தமிழை புதிதாய் உயிர்ப்பித்திடு தமிழா!
அகரத்தில் நாம் தொடங்கி பல
அண்டங்கள் கடந்து விட்டோம்!
ஆகாய மார்க்கத்தில் நாம் ஆராய்ச்சிகள்
பலப் பல செய்து விட்டோம்!
அயல்மொழி மோகம் விடுப்போம்
அன்னைத் தமிழ் மொழி காப்போம்!
நாளை வரும் நம் தலைமுறைக்கு
மேலும் புகழ்ச் சேர்ப்போம்!..
படைப்புக்கு தானே முழு உரிமையாளர் என்று உறுதியளிக்கிறேன்.
பெயர்: ரா. விவேக் ஆனந்த்
வயது: 24
வசிப்பிடம்: ஜி2, 403/9, 16வது மெயின், 13வது குறுக்குத்தெரு, வெங்கடேஸ்வரா அமைப்பு, பிடிஎம் 1வது நிலை, பெங்களூர்.
மாவட்டம்-560 068, கர்நாடகா.
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: +91 9916080613

