நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”
உலகே பேசும் மொழியாக
உலகெங்கும் தேன்தமிழ் மணம் பரவும்!
நம் இலக்கிய அறிவியலை ஆராய்ந்து
நவீன அறிவியலில் புதுமைகள் சேரும்!
இணையத்தின் இதய மொழியாக
நம் மொழி சிறக்கும்!
தாய்த் தமிழுக்கு புதிய சங்கம் பிறந்து
உலகத் தமிழர்களின் புதிய இலக்கியங்கள்
அதை அலங்கரிக்கும்!
தீவிரவாதம் இல்லாத
தீண்டாமையைத் தீண்டாத உலகிலே!
நீதி நூல்கள் காட்டிய வழியில்
நிறைவான அன்பினில்
எதற்கும் குறைவில்லாத வாழ்விலே!
யாருக்கும் அடிபணியாது
தன் திறமையால்
உலகிற்கே முன்னோடியாக
தமிழர் வாழ்வர்.
இவை யாவும் நடக்கும்
தமிழனே!
உன் பிள்ளை
தாய்த் தமிழில் பேசுவதை
பெருமையாக நீ நினைத்தால்!
இந்த படைப்பு என்னுடைய சொந்தப் படைப்பு என உறுதி அளிக்கிறேன்.
பெயர்: வே. பூபதிராஜ்
வயது: 24
வதிவிடம்: 5-112, வா. பசுபதிபாளையம்,
வாங்கல் அஞ்சல்,
கரூர் மாவட்டம்.
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: 97884 15642