நாளைய தமிழும் தமிழரும்- “பொங்கல் கவிதைப்போட்டி2015”

கருவினில் தாங்கிய தாயே உன்னை!-எகிப்து
கல்லறை ஆக்கியதேனோ ?
அம்மா என்று உன்னை!
அழைப்பதும் இன்று வீணோ ?
அன்பை சொல்ல கூட!
அந்நிய மொழியொன்று ஏனோ ?
பார் போற்றும் என் தாய் தமிழை!
பாரமாய் என்னுவதேனோ ?
தமிழர் அழிவை கண்டோம் நம்
தமிழும் அழிய கண்டோம்!
தமிழர் காக்க இணைவோம் நாம்
தமிழுக்காக இணைவோம்!
அறிவியல் ஆயிரம் படைப்போம்
அதுவும் தமிழில் உலகுக்கு அளிப்போம்
கதவுகள் தமிழால் திறப்போம்
கனவுகள் நிஜம் பெற உழைப்போம்
தமிழை அமிழ்தாய் பருகும்
தமிழர்கள் நாம் என மகிழ்வோம்
பழையவை மறந்து நகர்வோம்-அந்நிய
பழக்கங்கள் போகியில் எரிப்போம்
தமிழ் வருடத்தில்
தமிழனாய் பிறப்போம்
நாளைய தமிழும் நாமே! நாளைய தமிழரும் நாமே!
நாளைய தீர்ப்பும் நாமே! தீர்ப்பை மற்றிடுவோமே -வாழ்க தமிழ் !!!!!!!!
================================================================================================
இது எனது படைப்பு இந்த படைப்புக்கு நானே உரிமையாளர் என உறுதியளிக்கிறேன்
================================================================================================
நே.தினேஷ்,
வயது = 26,
51/16 C சுப்பையா முதலியார் புரம்,
2வது தெரு,
தூத்துக்குடி -628003,
இந்தியா.
91-8754174477

எழுதியவர் : நே.தினேஷ் (12-Jan-15, 11:00 am)
பார்வை : 59

மேலே