சாதி ஒழி மதம் அழி

மனிதா, நீ...
சாதிக்கப் பிறந்தவன்
சாதிக்குப் பிறந்தவனில்லை!
சாதி...
சாதியற்ற
சமுதாயத்தை
சாதி...!
சாதியை வைத்துக்கொண்டு
சாதித்தது என்ன?
கண்ணீர் குளம் கண்ட
முதுகுளமா?
கண்மணிகள்
எரிந்த
வெண்மணியா?
பல குடிகள் அழிந்த
பரமக்குடியா?
வெறிகள் படர்ந்த
தர்ம,
புரிகளா?
சாதி வீரம் பேசியே
சோரம் போய்விட்டீர்கள்!
உங்களின் அடையாளம் - சாதி,
அடைமொழியில் இல்லை - ஆதி,
தமிழ்மொழியில்!
இரட்டை குவளையை ஒழித்தால் மட்டும் போதாது
அரசியல் வாதிகளின்
இரட்டை முகத்தை ஒழிக்க வேண்டும்
சாதி ஒழிப்பும், மத அழிப்பும்
இணையப்புரட்சியோடு நின்றிடாமல்
இதயப்புரட்சியிலும் வேண்டும்
உங்கள்
வாதங்களும், வழக்குகளும்
அறிவாள் தீர்க்கப்படட்டும்
அரிவாளால் அல்ல!
நம் மண்ணிற்கு
ஆகுபடி ஆகாத
சாகுபடி
இந்த சாடியடி!
சாதி ஒழி! மதம் அழி!!
இவையிரண்டும்
மானுடத்தின்
இழி!!!