நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி - 2015

உச்சரிப்பில் சுவைக் கொண்ட மொழி நம் தமிழ் மொழி !

ஆங்கிலேயேர்கள் மனதையும் கொள்ளைக் கொண்ட மொழி நம் தமிழ் மொழி !


நாம் பேச பேச தேனாக இனிக்கும் இம் மொழி !

இப்போது ஒரு கல்லறையில் தூங்குவது ஏனோ ?

வான் பொழியும் மழையும் வணங்கி செல்லும் எம் மொழி தமிழ் மொழி !

வந்தாரை வணக்கம் சொல்லி வரவேற்று வாழ வைத்த தமிழ் மொழி !

அக்காலத்தில் நம் பாட்டி தாத்தாக்கள் ரசித்து பேசிய தமிழ் மொழி !

இக்காலத்தில் இருக்கும் பெற்றோர்கள் இடைவிடாமல் பேசுவதோ ஆங்கில புது மொழி !

நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயன் கூட தமிழ் மொழியை நேசிக்க ,

நம் நாட்டின் தாய் மொழியாம் தமிழ் அதை சுவாசிக்க கூட நாம் யோசிக்கிறோம் !

வெள்ளையனே வெளியேறு என்று
சொன்னோம் நாம் அன்று ,

நம் தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி விட்டோம் இன்று !


நாளை என்னமோ எங்கோ நம் தமிழ் மொழி காண்பர் யாரோ ?????

இந்த படைப்பை நானே சொந்தமாக உருவாக்கியது என்று உறுதி அளிக்கிறேன்

ரவி.சு எண்/ 7 எடப்பாளையம் தெரு பூங்கா நகர் சென்னை- 600003
978998914

எழுதியவர் : ரவி.சு (13-Jan-15, 6:33 pm)
பார்வை : 479

மேலே