நாளைய தமிழும் தமிழரும்பொங்கல் கவிதைப் போட்டி

காளையுடன் கட்டிப்புரண்ட தமிழா உன் காலை இனி எப்படி விடியப் போகிறது
விவசாயம் இல்லாமல் வியர்வை உனக்கு கொட்டாமல் வேதனை இனி நிரந்தரமடா!

பதவிக்கு பலம் சேர்ப்பான் ,அதைக் காக்க பராசக்திக்கு பழம் வைத்து பூசை செய்வான்!
உளவனோ மண்ணை திண்ண,மன்னவனோ மண்ணை விற்ற பணத்தை எண்ண!

இந்தியா நேற்று ஆங்கிலேயன் அடிமையில்,
தமிழோ நாளை இந்தியின் அடிமையில்!

தமிழ் முருகனோ படை வீட்டை காலி செய்தான் ?
மலேசியாவில் எனக்கு தமிழில் அர்ச்சனை என்று!

பாசமுள்ள என் தமிழ ,ரோசம் எங்கே போனதடா??
தமிழக மீனவன் பிடிபட்டால் ,தமிழ் மீனவன் கைது.!
பஞ்சாபி மீனவன் பிடிபட்டால், இந்தியமீனவன் கைது .!
என்னடா இதுதான் நியாயமா?தமிழனுக்கு அடிபட்டால் மட்டும் தான் காயமா??

ஆடம்பரம் செய்ய தமிழனுக்கு தெரியாது!
விளம்பரம் செய்ய அவனுக்கு தமிழே தெரியாது! இது தொடர்ந்தால் ???

தமிழ் மொழிக்கு ஆங்கிலத்தில் விளக்கம் !
தமிழ் நாட்டின் ஆட்சி மொழி இந்தியென இருக்கும்!

அந்நியன் கொடி ஆங்காரமாய் பறக்கும்!
உன் பிள்ளை பிறந்தவுடன் “அம்மாவை” மம்மி என அழைக்கும்!

சிரிக்கும் போதுகூட ஆங்கிலதில்தான் சிரிக்கும்!

சிந்து சமவெளி நாகரீகம் போல், தமிழ் என்று ஒரு இனம் இருந்ததாம்,
தமிழ் என்று ஒருமொழி இருந்ததாம் என 2020 புத்தகத்தில் தான் உன் பிள்ளை படிக்கும்!

எழுதியவர் : சந்தனபாரதி.ப (13-Jan-15, 8:11 pm)
பார்வை : 65

மேலே