சாதி

சாதி சாதி...

பள்ளிக்குச் சென்றாலும் சாதி..!
வேலைக்கு விண்ணப்பிக்கச் சென்றாலும் சாதி..!
திருமனத்திற்கு என்றாலும் சாதி..!
இறந்து கல்லறைக்குச் சென்றாலும் சாதி..!
அவசரத்திற்கு இரத்தம் தேவை படும்போது மட்டும் எங்கே போனது உங்கள் சாதி ????

அகரத்தை எடு..!
சிகரத்தை தொடு..!
ஆணவத்தை விடு..!
அன்பைக் கொடு..!

சாதிக்காக போராடுபவர்களை பின்பற்றுவதை விடு..!
ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக போராடு.

நமக்குள் வேறுபாட்டை ஏற்படுத்துவது இந்த சாதி..!!
நம்மை நாமே பதம் பார்பதற்கு நாம் கண்டுபிடித்த ஆயுதம் சாதி..!!

உன்னைவிட உயர்ந்தவனும் இல்லை..!
உன்னைவிட தாழ்ந்தவனும் இல்லை..!

சா(தீ): சாதியில் (தீ) உள்ளது.
அன்(பூ): அன்பில் (பூ) உள்ளது.
சிந்தித்து செயல்படுங்கள்.
வாழ்க்கையை 'பூ'க்களினால் அலங்கரிப்பதா..!?! அல்ல
வாழ்க்கையை 'தீ'யினால் எரிப்பதா..!?!

எழுதியவர் : கிஷோர் ராம்தாஸ் (13-Jan-15, 8:56 pm)
சேர்த்தது : கிஷோர் ராம்தாஸ்
Tanglish : saathi
பார்வை : 325

மேலே