அனுதாபம்
பாவப்பட்ட ரோசாவே..!!
பூசைக்குப் பொருளானால்
புனிதமென்ற பெயர்கிடைக்கும்...!
ஆசையுடன் பெண்களெல்லாம்
அணிகின்ற வரம்கிடைக்கும்..!!!!
சன்னதிக்குள் மாலையானால்
சாமியின் அருள்கிடைக்கும்...!!
சருகென்று உதிர்ந்தாலும்
உரமென்ற பயனிருக்கும்...!!!
சூழ்ச்சிக்குப் பலியானால்
சொந்தங்கள் இருக்காது..!!
வாழ்க்கைக்கு முரணான
வசந்தங்கள் நிலைக்காது..!!!