என் ஈன இதயம்

விதியில் நடந்தால்
கல் ஏறி என்கிறது
எனது சாதிய வெறி

கீழ்சாதி
பெண்களைக்கண்டால்
'கை'பிடித்து இழுயென்கிறது
மேல்சாதி தீமிர்

வாக்குவாதம் செய்தால்
தாழ்ந்த சாதிக்காரன்
'அடி' என்கிறது
என் மூதாதையாரிடமிருந்து
கற்றுக்கொண்ட
மேல் சாதிய மூர்க்கம்

என் இனத்தோடு
கீழ்சாதிக்காரன் என்று
அவன்
குடிசையையும்
உயிரையும் எறிக்கிறது
என் ஒசந்த சாதிப்புத்தி

வகுப்பரையில்
ஒன்றாக அமரவைத்த பின்பு
என் மனம் கற்க மறக்கிறது
சமத்துவத்தை

ஆனால்
அதே கீழ்சாதியிடம் என்னால்
விற்க முடிகிறது அரசியலில்
நான் கற்ற சமத்துவத்தை

அப்பாவிகளான அவர்களை
ஆதிக்குடிகளான அவர்களை

மேடையில்
அப்பப்போது
சொல்லிக்கொள்ளமுடிந்த
சகோதரன் என்ற சொல்லை

எப்போதாவது
எண்ணி மகிழதா..?

என் ஈன இதயம்..............

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (13-Jan-15, 8:47 pm)
Tanglish : en ina ithayam
பார்வை : 98

மேலே