அது

அது..
அவனோடு கூடவே
நுழைந்தது..
அவன் பின்னாலேயே..
..
தரையை குனிந்து நோக்கிய படி..
இங்கும் அங்கும்..
எதையோ தேடியபடி..
அவனோடு கூடவே அந்த
வீட்டினுள் நுழைந்தது..
..
ரகசியக் குரல்கள்..
கை மாறிய பணம்..
சிரிப்பு..
..
எங்கே உங்கள் நண்பர்கள்..
என்ற கேள்வியில்..
அதிர்ந்தான்..அவன்..
இதற்கு முன் எப்போதும்
வந்ததில்லையே இங்கு..
அவர்களுடன்..
எப்படி நீ கேட்கிறாய்..?
..
கொஞ்ச நேரம்..
மயான அமைதி..
...
ரத்தம் கக்கி
தரையில் அவன்..
..
அது வெளியேறியது..
அவன் இல்லாமல்!