இப்படி நாம் காதலிப்போம்பொங்கல் கவிதை போட்டி 2015
மரத்திலோர் இதயம் கொய்து
பேருந்தில் நம் பெயரை செதுக்கி மாற்றானொருவனதை ரசித்துபோவானோ?
அவனுமொரு சுவற்றில் கிறுக்கிப்போவானோ? - யார்
கண் பட்டாலும் பரவாயில்லை என்றுமே கலையா வானவில்லாக காதலிப்போம்.
காதல் சாலையில் இடதுப்புறம் செல்வோம்.
ஆயிரம் சிவப்பொளி நிறுத்தங்கள் வரட்டும் வாழ்நாள் முழுதும் கரம் பிடித்தே நடப்போம்
மஞ்சளொளிவேண்டிக் கிடக்கும் அதிகாலையாய் பொறுத்திருப்போம்
காதல் கரையேறும் நம்பிக்கையில்.
சமூகவலைதளத்தை உள்ளங்கயிலேந்தியோ
இசைக்கருவியை காதிலடைத்தோ திரிய வேண்டாம்
மழையிளொரு நனைதல் வேண்டாம் பெருந்தில்நாம் கொஞ்ச வேண்டாம்
வாரயிறுதியில் வணிகவளாகம் தேட வேண்டாம்- நாம்
விழித்துபிழைக்கவும் உழைத்து உறங்கவும்
காலை பொழுதிலும் இரவின் நுனியிலொரு
குறுஞ்செய்தியாய் பரிமாறிகொள்வோம் நம் காதலை.
இச்ச்சமுகத்தை முட்டி மோதி முனையவேண்டாம்
சாதிக்களைய முழம்நீளக்கயிற்றில் தொங்கவேண்டாம் - மாறாய்
சமுகத்தை காதலிப்போம்.
ஈழத்தின் கண்ணிருக்கோ காவிரியில் மீத்தேனுக்கோ
எல்லையில் வீரனுக்கோ எகிப்தில் போருக்கோ
வாளெடுத்து செல்லச் வேண்டாம்.தோள்கொடுப்போம் - அது
முகநூளில் பகிர்வாகவோ மனிதசங்கலியிலொரு காரமாகவோ
ஒருகொடியிலொரு கையெழுத்தாகவோ இருக்கட்டும்.இப்படி நாம் காதலிப்போம்!
இப் படைப்பு என்னுடையது என்பதை உறுதிப்படுத்துகிறேன்.