தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளும்

தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளும்



தமிழர் திருநாள்
தமிழ்ப் பண்பாட்டை
பாருக்கு எடுத்துக் காட்டும் திருநாள்

கடன் வாங்கிய திருவிழா அல்ல இது
காசைக் கரியாக்கி நச்சுப்புகை எழுப்பி
கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளியும்
இதயத்தைத் துடிக்க வைக்கும் வெடிச்சத்தமும் கிடையாது.

எவருக்கும் சிறு இடையூறுமின்றி
கொண்டாடும் திருவிழா தமிழர் திருநாள்
தமிழர் பண்பாட்டோடு தமிழ் மண்ணோடு
பின்னிப் பினைந்த திருவிழா.

உயர்ந்த நம் பண்பாட்டைக்
கொண்டாட்டத்திலும் காட்டுவதால்
இயற்கைக்கு ஊறுவிளைவிக்கும்
தீவினையெல்லாம் நம்மிடமில்லை.

வேதிப் பொடியைத் தூவியோ
கந்தகத்தை வெடிக்க வைத்தோ
காற்றின் தூய்மையைக் கெடுக்க
அல்ல நம் தமிழர் திருநாள்.


அய்ந்திணை கொண்டு
ஆறுபருவம் கண்டு
அறுசுவை உணவுண்டு
இயற்கையைப் போற்றுவது
தமிழர் பண்பாடு!

தமிழர் திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும்
மதம் கடந்த நன்னாள்.

தமிழறிஞர் கூற்றுப்படி
சாதி மதம் கடந்து
தைத் திங்கள் முதல் நாளே
தமிழ்ப் புத்தாண்டாகவும்
தமிழர் திருநாளாகவும் கொண்டாடுவோம்.

----------------------------------------------------------
பேராசிரியர் இரா. சுவாமிநாதன்
----------------------------------------------------------

எழுதியவர் : (14-Jan-15, 12:13 pm)
பார்வை : 130

மேலே