பற்றிப்பிடிப்போம் ஒற்றுமைக்கயிற்றை
..."" பற்றிப்பிடிப்போம் ஒற்றுமைக்கயிற்றை ""...
நான்கு செம்மறி ஆடுகளும்
ஒரு ஓநாயும் கதையறிந்தும்
சாதியென்றும் மதமென்றும்
மறுதலித்து மனிதங்களை
மாற்றிவைத்து ஓ மனிதனே
இன்னும் எத்துனை காலங்கள் !!!
வேற்றுமையில் ஒற்றுமை
ஓங்கியே ஒலிக்கிறதந்த
ஒலி பெருக்கியில் பேச்சு
உனக்கும் எனக்குமில்லை
ஊருக்கே உபதேசமென்று
பிரித்தாளும் சதிகாரர்களின் !!!
தேனொழுகும் வார்த்தையில்
விட்டில் பூச்சிகளாய்
வீழ்ந்திடும் வீணர்களே
வீரத்தோடு சேர்த்தென்ன
விவேகத்தையுமா நீ
குழிதோண்டி புதைத்துவிட்டாய் !!!
வேசங்களின் கேசங்களில்
மாட்டு மந்தைகளாய் நாம்
அங்கும் இங்குமொன்றாய்
பிரிந்தே கிடைக்கும்வரையில்
காய்ந்த பனையோலையும்
பயமூட்டவே எத்தனிக்கும் !!!
மாட்டின் மந்தைகள் கூட
ஒன்றாய் சேர்ந்துவிட்டால்
திமிரெடுத்த சிங்கங்களும்
சிட்டாய் தெறித்து ஓடிடும்
மனிதர்கள்யில்லையா நாம்
மாறிடுவோம் மாற்றிடுவோம் !!!
பொறுமையெதற்கு புறப்பட்டு
ஒற்றுமையை ஒற்றுமையாய்
ஒருமித்த மனதோடே நாம்
பற்றிப்பிடிப்பது எப்போதோ
இந்த நானிலமும் நன்றாய்
செழிப்பதுவும் அப்போதே !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...