இருபிறவியாலன்

குழந்தையாய் பிறந்தபோதே துன்ப மூட்டையை
சுமந்தவர்கள் நாங்கள்..
பள்ளி பருவத்தில் வினோத ஜந்துகள் ஆனோம்..
பாட வேளைகளில் மாணவர்களின் இறுக்கத்தை கலைக்கும் கோமாளிகள் ஆகிபோனம்...
இறுதி வகுப்பு படிக்கும் பொது பெற்றோருக்கு அவமானமாகி போனோம்..
கல்லூரியில் செய்முறைகூட பொருளாகி போனோம்...
சக மாணவர்களுக்கு கலவி பொம்மையாய் ஆனோம்..
எங்களிடம் அன்பாக பேசுபவர்கள் கூட வஞ்சபுகழ்ச்சி அணியை கலந்து பேசுகிறார்கள் ...
புராணத்தில் நாங்கள் அரவான் கடவுள்..
இப்போது நாங்கள் மரத்து போன மங்கைகள்..
அரித்து போன ஆண்கள்...