ஈழத்தில் இல்லை ஈரம்

தன்னலம் கொண்டு
என்குலம் கொன்று
கண்குளம் ஆக்கினாய் !

சிங்களம் எதிர்த்த
எம்குல பென்னைநீ
வஞ்சகம் துணைகொண்டு
வீழ்த்தினாய் !

கைதூக்கிவந்த
தோழனை எல்லாம்
நிர்வாணமாக்கினாய்
எம்வாழ்வை
நிர்மூலமாக்கினாய் !

எம் மாவீரர் துயிலும்
கல்லறை தன்னை
மண்ணோடு மண்ணாக்கினாய்!

பெண்பிணம் புசித்து
பாரெங்கும் பார்க்கவே
உன்குலம் தூற்றினாய்!

வீரத்தை கொன்று
பிணங்களை தின்னும்
கோலத்தை எல்லாம்
உலகமே கைகட்டி
பார்க்குது நின்று

தலைவனை கண்டு
தம்பிமார் கொண்டு
தாக்குதல் தொடரும் நாள்
வெகுதூரத்தில் இல்லை
அதுதான் உங்கள்
வாழ்வுக்கான எல்லை !!!!!

தோழன்

து.ப.சரவணன்

எழுதியவர் : து.ப.சரவணன் (16-Apr-11, 2:26 pm)
பார்வை : 385

மேலே