உன்னைப்போல் வாழலாம்

மதுரையிலே மல்லிப்பூ
மணக்கிறதாம் மனிதபூவாய்
உதிரும் முன்னே உயிலெழுத
உதவியதோ ஐந்து உயிர்களுக்கு

வீரனென்றால் வாழும்போதும்
விழுவதென்றால் வளரும்போதும்
ஆலமரமாய் அகிலமாக்கியே
அர்ப்பணிப்பில் தழைக்கும்போது

மூச்சு காற்றில் வாடிபட்டியும்
முழுவதுமாய் கலக்குது வரலாற்றில்
இரமேஷை போன்று தியாகம் செய்வதால்
இராணுவம் உள்ளவரை காத்திடும் கருணையே

வாழ்த்திய சொற்கள் பூக்களாய் மாறட்டும்
வணங்கிய கைகள் உன்னையே தொழட்டும்
பூமியில் மனிதம் புத்துயிர் பெறட்டும்
போற்றுவோம் போற்றுவோம் வீரனே உன்னை !


எழுதியவர் : . ' .கவி (16-Apr-11, 1:50 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 534

மேலே