இப்படி நாம் காதலிப்போம்

தைப்பொங்கல் கவிதை திருவிழா போட்டி2015
இப்படி நாம் காதலிப்போம்
இளமையின் இனக்கவர்ச்சியால்
விழிகளில் உதயமாகி,உணர்வில் கலக்காமல்
உடலில் கலந்து உதாசீனப்படும் காதலை
மீண்டும் உயிர்தெழ ஒரு சின்ன முயற்சி
செயற்கை போதையில் இயற்கைக்கு
சமாதி கட்டும்,நம் உயிர் வேளாண்மையை
இயற்கை உரமிட்டு “நம்மாழ்வாரை”
கொஞ்சம் காதலிப்போம்
மூப்பு எய்தும் நம் பெற்றோர்களை
முதியோர் இல்லம் அனுப்பாமல்
முற்பிறவி கடனாய் நினைத்து
இப்பிறவியில் பேணி காதலிப்போம்
பண்டிகை நாட்களில் கொண்டாட்டம்
போடாமல் ஆதரவு இல்லாதவர் இல்லம் தேடி
சென்று அன்பை பொழிந்து அன்பை பெறுவோம்
இலக்கிய உப்பரிகைகளை அலங்கரித்த
அந்த அண்ணல்களின் உன்னத நோக்கல்களை
மீண்டும் சுத்தப்படுத்த சூளுரைத்து
மனித நேயம் காதலிப்போம்

எழுதியவர் : வ.லெ.பெருமாள்,சென்னை +919894163714 (14-Jan-15, 6:52 pm)
சேர்த்தது : லேனா பெருமாள்
பார்வை : 50

மேலே