மனமே சோர்ந்து விடாதே

மனமே !
புதியதை யோசி
பழையதை மறந்து விடு
வாழ்க்கை வாழ என்று யோசி
இறப்பதற்கு அல்ல
கவலை வரும் போது சிரித்து
எதிர் கொள்
கவலை கூட உன்னை கண்டு
மிரண்டு ஓடும்
தோல்வி ஒரு முறை வரலாம்
இரு முறை வரலாம்
தோல்வியே முடிவு அல்ல
முயற்சி செய்
நீ ஜெயிக்கும் வரை
பின் பார் உலகமே உன்னை கண்டு
பொறாமை கொள்ளும் !