சின்னச் சிட்டு நான்

சின்னச் சிட்டு நான்

சின்னச் சிட்டு நான்
சிரிக்கும் மொட்டு நான்
பட்டாடை கட்டி வந்த
பவள முத்து நான் ..!!

புதுப்பொங்கல் என்பதாலே
புத்தாடை வேண்டும் என்றேன்
சரிகை நெய்த சேலையை
தாய்மாமன் பரிசளித்தான்..!!

தாயவளும் சளைக்காமல்
கனகாம்பர சரம் தொடுத்தாள்
உச்சி முதல் பாதம் வரை
அன்பிலே அலங்கரித்தாள்..!!

தாயிற்கு தலைமகள் நான்
தமிழுக்கு இளையவள் தான்
தரணியிலே தமிழ் வளர்ப்பேன்
இது என் தாய் மீது சத்தியம் தான் .!!

உடை நடையும் தமிழே தான்
உயிர் மூச்சும் தமிழே தான்
என் தாயும் தமிழே தான்
தாய் நாடும் தமிழே தான் ..!!

சின்னச் சிட்டு நான்
சிரிக்கும் மொட்டு நான்
பட்டாடை கட்டி வந்த
பவள முத்து நான்..!!!!

எழுதியவர் : கயல்விழி (16-Jan-15, 8:39 am)
Tanglish : sinnach sittu naan
பார்வை : 170

மேலே