மனங்களில் அவதரிக்கும்
கோப்பையெனில் கோப்பையாக
குடுவையெனில் குடுவையாக
குடமெனில் குடமாக
தொட்டியெனில் தொட்டியாக
பதுங்கிய நிலைகளிலும்
பாய்ந்த நிலங்களிலும்
ஏந்திய கைகளிலும்
எடுக்கும் எதுவினிலும்
குழி நிறைத்து
அவதரித்தபடியே
நீர்த்துளிகள்.
மனக் களிப்புகளிலும்
மனக் கசப்புகளிலும்
குறை நிறைக்கு
அவதரித்தபடியே
புரளிகள்.