சிரித்துவிட்டுப்போனவள்

உன் இதயத்தை
ஊடுருவிய உல்லாசத்தில்
நக்கலாய் எனைப் பார்த்து சிரிக்கின்றன?!....
"நியுட்ரினோ துகள்கள்"!!....
யாரைப் பார்த்து
வெக்கத்தில் சொக்கி
நிற்கிறாய் நீ?!......

நடப்பை
கிடப்பில் போட்டது
"கண்ணாடி"
கண் முன்னாடி
மென் இடையழகைப்
பார்த்து வேர்த்து?!......

வரதட்சனை கொடுக்க
என் விழிகள்
தயாராய்தான் இருக்கின்றன - அவள்
பாதம் போகும் வழிதான் தெரியவில்லை?!.....

வெட்கத்திற்கு
தொக்கம்
சொன்னவள்
சொன்னாலும் சொல்லுவாள்
எனக்கும்?!.....

உன்
ஜடைக்கு
விடை சொல்?!.....
எங்கே அவன்?!....

அலைபேசி
விலை பேசுகிறது
முத்தத்தோடு
சத்தத்தையும்
அவள்
மொத்தத்தையும்?!......

எழுதியவர் : வைகை அழகரசு (21-Jan-15, 3:19 pm)
பார்வை : 163

மேலே