கடைசி வரை நீ வேண்டும்

மணவறையில் உன்னை காண வேண்டும்
அது மண்ணறை வரை இருக்க வேண்டும்
மனதிலே உறுதி வேண்டும்
அது உயிர் உள்ள வரை இருக்க வேண்டும்.

உன்னோடு நான் வாழவேண்டும்
அது உணர்வுகள் இருக்கும் வரை
உண்மையாய் உன் உடலோடு
என் உடல் ஒட்டி இருக்க வேண்டும்.

காதலோடு இருக்க வேண்டும்
அது நான் கண் மூடும் வரை
கண்டிப்பாய் கடைசி வரை
ஒளியாய் இருக்க வேண்டும்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (21-Jan-15, 1:31 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 319

மேலே