என் கண்ணில் விழுந்தாய்

கொட்டுகின்ற
மழையாய் விழுந்தாய்
எனை சட்டென்று
உன்பக்கம் இழுத்தாய்

கண்ணில் பார்க்கும்
காட்சி எல்லாம்
உன்முகம் தெரியுதடி...
உன்னில் விழுந்து
என்னை தொலைத்தேன்
உயிரே இனிக்குதடி..

கற்சிலை போலே கிடைத்தாய்
எனை பட்டென போட்டு உடைத்தாய்

உன்னாலே எங்கோ தொலைத்து
எங்கோ தேடுகிறேன்
என் கண்ணில் விழுந்தாய்
கனவை நாடுகிறேன்..

எழுதியவர் : தவம் (21-Jan-15, 12:55 pm)
பார்வை : 106

மேலே