சிறியதாகி போன மனித நேயமும் உறவுகளும்
கூட்டமாக வாழ்ந்தார்கள் உளி கொண்டு எழுதினார்கள் குகைகள்தனில்...
குடும்பமாய் வாழ்ந்தார்கள் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள் ஓலைச்சுவடிதனில்...
தனிக்குடித்தனம் போனார்கள் பேனா கொண்டு எழுதினார்கள் காகிதம்தனில்...
உயிருக்கு போராடும் நிலைதனையும் , ஓலைக் குடிசைகள் பற்றி எரிவதனையும் , போர் வன்முறை காட்சிதனையும் படம் எடுத்து உயிரோட்டமாய் எழுதி ஊடகம் தனில் பரபரப்பு செய்தியாக்கினார்கள்...
விஞ்ஞான வளர்ச்சிதனில் சிறியதாகி போன உலகில் தனிமையில் விரல் கொண்டு எழுதுகிறார்கள் ஆண்ராய்டு , ஐஓஎஸ் கைபைபேசிகள்தனில்...
பார்த்து பார்த்து வளர்த்து , பள்ளியில் சேர்த்து , கல்வி அறிவு ஊட்டி , கைபிடித்து எழுத கற்றுக்கொடுத்த தெய்வங்களுக்கு காப்பகங்கள் இன்று...
அறிவியல் வளர்சிதனில் சிறியதாகி போனது உலகம் மட்டும் அல்ல மனிதநேயமும், உறவுகளும் தான்...