பழனியப்பன் சாரைப் போலவே ஒருவர்
ஐந்தாம் வகுப்பு
பழனியப்பன்
சாரைப்போலவே ஒருவர்
தேநீர்க்கடையில் !
அவர்
நிச்சயம்
பழனியப்பன் சார்
இல்லை !
ஆனால்
வலப்பக்கம்
வகிடெடுத்து வாரிய
அதே கிராப் !
உதட்டின்
அளவுக்கேற்ப
கச்சிதமாய்
நறுக்கப்பட்ட
அதே
அந்தக்கால
எண்பதுகளின் மீசை !
அவர்
அணிந்திருந்த
அந்தக் கட்டம் போட்ட
சட்டை போலொன்று
பழனியப்பன் சாரிடமும்
இருந்ததாக
ஞாபகம் !
அவர்
போட்டிருந்த
தங்க பிரேமிட்ட
அந்த
மூக்குக் கண்ணாடி
போலொன்றை
பழனியப்பன் சாரும்
அணிந்து கொண்டிருப்பார்
பேப்பர் திருத்தும்போது !
கையை
ஆட்டி ஆட்டிப் பேசும்
பழனியப்பன் சாரின்
அதே தோரணையுடன்
யாரிடமோ
பேசிக்கொண்டிருந்து விட்டு
அவர்
விடைபெற்றுச்செல்ல..........
எப்போது
அணைத்தேன்
பிடித்துக்கொண்டிருந்த
அந்தச் சிகரெட்டை ???

