பாராட்டாய் மாற்றிடலாமே
சிதையாத சிறகுகளால்
இறகுகளை விரித்திட்டு
ஓவியமாய் ஒளிர்கிறது
காவியமாய் மிளிர்கிறது
வண்ணமிகு பறவையிது !
கூரிய பார்வையால்
தெரியும் இலக்கினை
வீரிய நெஞ்சமுடனே
விரைந்து அடைந்திட
எத்தனிக்கிறது பறந்திட !
படத்தால் வந்தஅழகா
பறவையால் படம்அழகா
எடுத்தவரின் நுண்ணறிவா
எடுக்கப்பட்ட நுட்பமறிவா
அலசுகிறது நெஞ்சமும் !
ஆய்ந்திட காரணிகளை
தேய்ந்திட வேண்டாமே
பாய்ந்திடும் சிந்தனையை
பாராட்டாய் மாற்றிடலாமே
தேரோட்டாமாய் உள்ளத்தில் !
பழனி குமார்

