மீன்கள் ஹைக்கூ
*
மீனின் இதயத்தைக்
குத்திக் கொல்கின்றது
தூண்டில் கொக்கியின் நுனி.
*
தூண்டில்காரனை ஏமாற்றி விட்டு
துள்ளி குதித்துத்
தப்பித்துப் போகின்றன மீன்கள்.
*
வயது என்னவாக இருக்கும்?
வெட்டுப்பட்டுப் கொண்டிருக்கும்
வலிமையான பெரிய மீன்.