பார்வையே போதும் --
கார்கால சாலை - அந்தி
கரைகின்ற மாலை
களியாட்ட வேளை ஆக்கும்
இவள் கொண்ட பார்வை
அலையோடும் இலையோடம்
அதுபோலும் நெஞ்சம்
அலைபாயும் நிலைமாற்றம்
கரையாமல் கரைசேரும்
காத்திருந்த பேருந்தை
கண்டத்தில் வரும்
நிறைவினை போல்
விழி ஓரத்தின் வீசலினால்
மது சாரத்தை தோற்க வைத்தாள்
மன பள்ளங்களை பூக்க வைத்தாள்
மழைக்கால சுழல்காற்று
கம்பி குடையொன்றை
குடை சாய்க்கும்
அதுபோலே மனமாகும்
ஒ தேவர்களே அறிவீரோ
இவள் விழி பார்வைகள் போதும்
பாற்கடல் அமுதம்
தேவையில்லை ...
சாகாவரம் அது தருமே