இடைதேர்தலெனும் தேனிலவு

இரண்டு மாதம்முன்
இறந்துபோன உறவொன்றை
வணங்கித் தொடங்கும்
உல்லாச உற்சவம்.

முன்னாள் நண்பர்களும்
சகோக்களும் ஒதுங்கிநிற்க
கூட்டனுமதியில் தணிக்கும்
பெருங்களிப்பு.

ஊரறிய உலகறியப்
பாதைகளில்
பணமிரைத்துப் பற பறக்கும்
உயரங்களில்.

என்னைப்போல நீ
உன்னைப்போல நானெனும்
சமத்துவ நீதியில்
பெரும்பான் ’மை’கள்.

கொழுந்துவிட்டெரியும்
கூ(ட்)டல் வேட்கையில்
தோற்பததென்னவோ
ஜனநாயக மறைதான்.

எழுதியவர் : சர் நா (23-Jan-15, 12:17 pm)
பார்வை : 185

மேலே