யாரு சிறந்தவன்

மூணு பேரு டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோலவேலை செய்றவங்க ஒரு ஜூவுல மீட் பண்ணாங்க,மூணு பேரும் க்ளாஸ் மேட்ஸ்....... அப்ப ஒருத்தன்நம்மள்ல யாரு பெஸ்ட்னு ஒரு சின்ன போட்டிவெச்சுப்பார்க்கலாம்னான். மூணு பேரும் அங்கஇருந்த ஒரு குரங்க சிரிக்க வெக்கிறதுன்னுமுடிவாகுச்சு.

மொதல்ல இன்ஃபோசிஸ்காரன். இன்ஃபோசிஸ்கல்ச்சரான பேசியே சரிக்கட்டுற டெக்னிக்கஃபாலோ பண்ணி ஜோக்சா சொன்னான்........குரங்கு அசையவே இல்ல.......

அடுத்து விப்ரோக்காரன் அவங்க ப்ராக்டிகல்ஒரியண்டட். கோமாளி மாதிரி சேட்டை பண்ணிகாட்டுனான். சைகை காட்டுனான். ம்ஹூம்..குரங்கு கொஞ்சம் கூட ரியாக்சன் காட்டல.

அடுத்து டிசிஎஸ்காரன். குரங்கு பக்கத்துல போய்காதுல என்னமோ சொன்னான். உடனே குரங்குபயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிருச்சு.

மத்த ரெண்டு பேருக்கும் ஆச்சர்யம், இருந்தாலும்தோல்விய ஒத்துக்காம, சரி இன்னொரு ரவுண்டுவெச்சுக்கலாம். பட் இந்த வாட்டி குரங்கை அழவைக்கனும் அப்படின்னாங்க.

மறுபடியும் மொதல்ல இன்ஃபோசிஸ்காரன் வந்துசோகமான உருக்கமான விஷயங்களாசொன்னான். குரங்கு கண்டுக்கவே இல்லை.

அடுத்து விப்ரோக்காரன். அழுகுற மாதிரி ஆக்ட்பண்ணி காட்டுனான். அதையும் குரங்கு சட்டைபண்ணலை

டிசிஎஸ்காரன், வந்து மறுபடியும் குரங்கு காதுலபோய் என்னமோ சொன்னான். உடனே குரங்குஓன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு.

ரெண்டு பேருக்கும் அதிர்ச்சியா போச்சு, இதையும்ஒத்துக்காம இன்னொரு டெஸ்ட் வெக்கனும்னுமுடிவு பண்ணாங்க. இந்த வாட்டி குரங்கைஓடவைக்கனும்னு சொல்லிட்டாங்க.

வழக்கம் போல இன்ஃபோசிஸ்காரன் முதல்லவந்தான். குரங்க பார்த்து குரைச்சான்.பயமுறுத்துனான். எந்திரிச்சி ஓடுன்னுகெஞ்சிப்பாத்தான். வழக்கம் போலகுரங்குபாட்டுக்கு பேசாம உக்காந்திருச்சு.

விப்ரோக்காரன் வந்து குரங்கை புடிச்சிதள்ளிவிட்டான். வெரட்டி பார்த்தான். குரங்குஅசரவே இல்ல.

டிசிஎஸ்காரன் இந்தவாட்டியும் குரங்கு காதுலபோய் என்னமோ சொன்னான். அதைக் கேட்டதும்உடனே குரங்கு தலைதெறிக்க ஓடி போயிருச்சு....

கடைசியா வேறவழியில்லாம ரெண்டு பேரும்தோல்விய ஒப்புக்கிட்டாங்க. டிசிஎஸ்காரன்கிட்டஅப்படி குரங்கு காதுல என்னதான் சொன்னேன்னுகேட்டானுங்க.

டிசிஎஸ்காரன் சொன்னான்.
ஃபர்ஸ்ட் குரங்குகிட்ட நான் டிசிஎஸ்ல வேலசெய்றேன்னு சொன்னேன், உடனே சிரிக்கஆரம்பிச்சிடுச்சு,
அடுத்து என்னோட சம்பளத்த சொன்னேன், அதுஅழுதுடுச்சு.
கடைசியா டிசிஎஸ்கு வேலைக்கு ஆள் எடுக்கதான்இங்க வந்திருக்கேன்னு சொன்னேன்........ அதுஓடியே போய்டுச்சி.....

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (23-Jan-15, 7:06 pm)
பார்வை : 789

சிறந்த நகைச்சுவைகள்

மேலே