ஆசை-உடுமலை சேரா முஹமது
அம்மாவின் ஆசை அவள் அண்ணன் மகனை
நான்மணக்க வேண்டுமென்பது!
அப்பாவின் ஆசை அவர் தங்கை மகனை
நான் மணக்க வேண்டுமென்பது!
அண்ணனின் ஆசை அவன் நண்பனை
நான் மணக்க வேண்டுமென்பது! ..
ஆனால் ,
என்னுடய ஆசையோ இன்னும்
நான் நிறைய படிக்க வேண்டுமென்பது...!

