கவிதை தேடும் தலைப்புகள் - பூவிதழ்

தலைப்புமட்டுமே எழுதப்பட்ட
இந்த கவிதைகளுக்கு
வாழ்க்கை என்னும்
வரிகளை எழுதுங்கள் !

வருங்காலம்
வாசித்துவிட்டு போகட்டும்
வளர்பிறையின் வரலாற்றை
உங்கள் பெயரையும் சேர்த்து !

இந்த தலைப்பெழுதில்லா
முகங்களுக்கு முகவரிகொடுங்கள் !
உங்கள் முகவரியே
முன்னுதாரணமாகட்டும் !

இல்லாதோரும்
நிறைய இருப்போரும்
முத்தமிடுங்கள்
முகங்கள் இங்கே இலவசம் !

குறைந்தபட்ச அன்பும்
கூப்பிட்டழைக்க உறவும்
கொடுத்துப்பாருங்கள்
குறையொன்றுமில்லை ..... பூவிதழ்

எழுதியவர் : பூவிதழ் (24-Jan-15, 2:24 pm)
பார்வை : 100

மேலே