இல்லை

ஞாயிறு இல்லாமல் ஞாலமில்லை
வானமில்லாமல் விண்மீன்களில்லை
பஞ்சபூதமில்லாமல் ஜகமுமில்லை
கதிரில்லாமல் ஒளியுமில்லை
காமமில்லாமல் கலவியில்லை
கவலைகளில்லா நெஞ்சமில்லை
கற்பனையில்லாக் கவியுமில்லை
காதலில்லாக் காவியமில்லை
கடவுளில்லாக் கோவிலுமில்லை
மரமில்லாமல் காடுகளில்லை
செடியில்லா தோட்டமில்லை
நீரில்லாமல் கழனியில்லை
ஆழமில்லாக் கடலுமில்லை
உப்பில்லாமல் சமையலில்லை
பசியில்லாமல் ஊண்ணில்லை
சந்தையில்லாமல் வியாபாரமில்லை
பொருள்களில்லா அங்காடியில்லை
அழகில்லாமல் ஒவியமில்லை
தெளிவில்லாமல் விஞ்ஞானியில்லை
கணிதமில்லாக் கணக்கில்லை
ஆசானில்லாமல் பள்ளியில்லை
ராகமில்லாமல் பண்ணில்லை
எல்லையில்லாமல் நாடுகளில்லை
நாடில்லாமல் அரசாங்கமில்லை
நேசமில்லாமல் அன்பில்லை
நோயில்லாமல் மருந்தில்லை
நெருப்பில்லாமல் வேள்வியில்லை
இரத்தமில்லா போராட்டமில்லை
இறப்பில்லா உயிர்களில்லை
போட்டியில்லாமல் விளையாட்டில்லை
கேள்வியில்லாமல் பதிலுமில்லை
இதில் இல்லையென்ற சொல்லை
எப்படியில்லாமல் செய்வது
இல்லை ஆனால் இருக்கு
என்பதே உண்மை

எழுதியவர் : ரமணி (24-Jan-15, 3:34 pm)
பார்வை : 82

மேலே