இரத்த சிவப்பு
Blood Red
இரத்த சிவப்பு
கடலிலே நான் குளிக்க சென்றேன்,
கடல் தண்ணீர் சிவந்திருந்தது;
ஆற்று தண்ணீரை நான் எடுத்தேன்,
அதுவும் சிவந்தே இருந்தது;
முல்லை பூக்களை பறிக்க சென்றேன்
செம்முல்லை காட்சி தந்தது;
இலவம் பஞ்சு வாங்க சென்றேன்
பஞ்சும் சிவந்து இருந்தது;
வனமும் சிவப்பு, மண்ணும் சிவப்பு,
வானத்தை நோக்கின் அதுவும் சிவப்பு;
எங்கும் சிவப்பு, யாதும் சிவப்பு;
வீர சிவப்பு, தமிழீழ சிவப்பு;
மறு பக்கம் வாழ் இலங்கை தமிழரை
வெட்டி அழித்த இரத்த சிவப்பு,
இறைவா, இரத்தம் சிந்த வைக்காதே
இனியும் உயிர்களை பறிக்காதே!
வேதனை எனதை நீ அறியேல்,
இரத்தத்தின் வர்ணத்தை மாற்றி விடு
உன் மனதை போலதை கருக்கி விடு!
சம்பத்

