பிரிவு

உன்னிடம்
சொல்லிட முடியாத,
வார்த்தைகள் பல...
என்னுள்ளே இறுக்கமாய்,
இரவுகளை
இறுகப்பற்றிக் கொல்கின்றது.
ஏகாந்தவேளை தரும் -உன்
நினைவுகள் மட்டுமே..
அதுசுகமாய் என்னருகே
நீயிருப்பதாய் ஓருணர்வு !
இருப்பினும் ..
கனமாய் வலிக்கிறது
மனது.
காரணம் கேட்டால்...
கண்டதெல்லாம் கனவென்று
உணரும் தருணம் ..
என் விழியோரம்
வழிந்திடும் கண்ணீர்த்துளி
உணர்த்தியது ..
நம்முடைய பிரிவை !!

பிரியமுடன் ....இவள்..

தயா பிரதீப்

எழுதியவர் : தயா பிரதீப் (24-Jan-15, 6:59 pm)
சேர்த்தது : Thaya Pradeep
Tanglish : pirivu
பார்வை : 90

மேலே