Thaya Pradeep - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Thaya Pradeep
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Jan-2015
பார்த்தவர்கள்:  149
புள்ளி:  15

என் படைப்புகள்
Thaya Pradeep செய்திகள்
Thaya Pradeep - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2015 2:05 pm

#வலிகள்_மட்டுமே
#என்
#வாழ்க்கையென்றானதோ?

வேதனையின் விளிம்பில்..
இறந்து கொண்டிருக்கிறது.
என்னிதயம்..!!

சுயநலத்தின்
போர்வைக்குள்ளே
சுருண்டுகிடந்த
உறவுகளைப் புரிந்திட,
முடியவில்லை.

பாசமென்றெண்ணி -நான்
மோசம் போன நினைவுகள்..
இன்னும் மறக்கவில்லை.

எல்லாமே..
கனவாய்ப்போன வாழ்வில்...
நிஜமென்பதைத்தேடி ...
நித்தமும் நாட்களை
நகர்த்துகின்றேன்.

தனிமைத்தீவில்
இறுதி வாழ்க்கையென்று..
உறுதி கொள்ளும் மனதில்...
எழும் கேள்வி.....????-நான்
இருந்தாலென்ன இறந்தாலென்ன...

தயா பிரதீப்

மேலும்

வரிகள் அருமை ... 26-Jan-2015 9:13 pm
சிறப்பு தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jan-2015 2:41 pm
Thaya Pradeep - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2015 2:03 pm

‪#‎என்_நம்பிக்கை‬ !!
நொடிப்பொழுதில்
எதுவும் ..மாறிப்போகும் .....
வாழ்க்கையில்...
துயரங்கள் எது வந்தாலும் .....
துணிந்து நிற்பேன்..
உனதன்பு மட்டும்
என்றும் மாறாதிருக்கும்
என்ற நம்பிக்கையில்..!!

‪#‎தயா_பிரதீப்‬

மேலும்

உண்மையான அன்பு தான் உண்மையான நம்பிக்கை சிறப்பு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jan-2015 2:36 pm
எதிர்த்து நிற்கும் அன்பு தோழமையே அருமை 26-Jan-2015 2:17 pm
Thaya Pradeep - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2015 7:21 pm

ஏதோ ஓர் தவிப்பு......
எனை ஆட்கொள்ளும் ..
உனிடத்தில்..
மனம் தொலைத்த நிமிடங்கள்.
அது மறுக்கப்படாத உண்மைகள்..
உன் நினைவெனும் கடலில்...
நித்தமும் நான் மூழ்குவதால் !!
...தவிப்பது என் மூச்சும்தான்!

தயா பிரதீப்

மேலும்

Thaya Pradeep - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2015 9:17 am

விழிவழி -என்
சோகமது கண்ணீராய் ,
வழிந்தோட.....
மன வலி மட்டும்
மௌனமாய்....
இறக்காமல் இருக்கிறது.
இன்னும்...
சிறுதுளி நம்பிக்கையில்...
என் மன வலிக்கு,
மருந்து ..
நீயான போதும்.-அதை
நீ மறந்திருப்பது ...
வேடிக்கை எனினும்..- உன்
மயக்கம் தீரும் நாள் வரை..
என் விழியிலும் மனதிலும்..
வலிகளைச் சுமந்தபடி....
இவள்..!!

தயா பிரதீப்

மேலும்

Thaya Pradeep - Thaya Pradeep அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2015 8:30 am

ஒவ்வொரு விடியலும்..
உன் திருமுகம் காண
ஏங்கிடும்.மனமிது.
உன் அழைப்பில்....-என்
கைபேசி சிணுங்கிடும்
அந்த நொடி...
அன்பு மழையில்...
எனை அணைத்துச்செல்லும்.
உன் குரலோசை தரும் இன்பத்தில்..
என் மனக்கண்களில்...
உன் திருமுகம் என்னெதிரில்...!!!

தயா பிரதீப்

மேலும்

நன்றி!! ( நண்பா இல்லை நண்பி .).!!! 24-Jan-2015 7:07 pm
நல்லா இருக்கு நண்பா தொடருங்கள் .......... 24-Jan-2015 9:57 am
Thaya Pradeep - Thaya Pradeep அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 12:26 pm

நீ மட்டும் படிக்காத
புத்தகங்களாய் -என்
வலியின் வரிகளின் ...
பக்கங்கள் ஒவ்வொன்றும் ...
யார் பார்வை பட்டு
புரட்டினாலும்...
புரிந்திடாது -உன்
விழி பார்த்திடாத -என்
(வலி) வரியின் பக்கங்கள்.!
தயா~ பிரதீப்

மேலும்

நன்றி !! 24-Jan-2015 9:58 am
நன்று ! 11-Jan-2015 12:48 am
Thaya Pradeep - Thaya Pradeep அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2015 1:14 pm

விளையாட்டாய்க் கூட,
நானழுவதை விரும்பிடாத நீ..
இன்று...
விரும்பியே ..
எனை அழவைக்கின்றாய்.!
விருப்பத்தோடு
ஏற்றுக்கொள்கின்றேன்..!
ஏனெனில்..
அதுகூட-நீ தந்ததால் ..!!

தயா பிரதீப்.

மேலும்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ... 24-Jan-2015 9:55 am
அருமை தோழமையே தொடருங்கள் ............... 11-Jan-2015 3:34 pm
அழகிய வரிகள் !! எனினும் சற்றும் அழுத்தமான உணர்வுகளை உள்ளடக்கிய ஆழமான வரிகளை அழகிய கவி நடையினில் வழங்கிடலாம் !! வாழ்த்துக்கள் !! 11-Jan-2015 2:59 pm
Thaya Pradeep - Thaya Pradeep அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2015 8:22 am

எழுத்துமுனையில் உனை
இறுகப் பற்றிட நினைத்தாலும்..
இடைவெளிகள் எமக்குள் ..
எங்கிருந்து தொடர்கின்றது ?
இதயம் இனிக்கும்
வார்த்தைகளால்...
உளமாற உரைத்திடினும்..
அதே இதயம் வலிக்கும்...
எனை விட்டு விலகிச்சென்றிடும்..
நீ பேசாத இடைவெளியில்...!
என் தனிமையிலும்..
இனிமைதரும் -உன்
கனிந்த முகம்,
நான் காணும் வரை ..
தொடந்திடுமோ
இந்த போராட்டம்..!!

தயா பிரதீப்..

மேலும்

அருமை நண்பா தொடருங்கள் ........ 24-Jan-2015 10:20 am
Thaya Pradeep - Thaya Pradeep அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2015 12:26 pm

நீ மட்டும் படிக்காத
புத்தகங்களாய் -என்
வலியின் வரிகளின் ...
பக்கங்கள் ஒவ்வொன்றும் ...
யார் பார்வை பட்டு
புரட்டினாலும்...
புரிந்திடாது -உன்
விழி பார்த்திடாத -என்
(வலி) வரியின் பக்கங்கள்.!
தயா~ பிரதீப்

மேலும்

நன்றி !! 24-Jan-2015 9:58 am
நன்று ! 11-Jan-2015 12:48 am
மேலும்...
கருத்துகள்

மேலே