வேதனை
![](https://eluthu.com/images/loading.gif)
#வலிகள்_மட்டுமே
#என்
#வாழ்க்கையென்றானதோ?
வேதனையின் விளிம்பில்..
இறந்து கொண்டிருக்கிறது.
என்னிதயம்..!!
சுயநலத்தின்
போர்வைக்குள்ளே
சுருண்டுகிடந்த
உறவுகளைப் புரிந்திட,
முடியவில்லை.
பாசமென்றெண்ணி -நான்
மோசம் போன நினைவுகள்..
இன்னும் மறக்கவில்லை.
எல்லாமே..
கனவாய்ப்போன வாழ்வில்...
நிஜமென்பதைத்தேடி ...
நித்தமும் நாட்களை
நகர்த்துகின்றேன்.
தனிமைத்தீவில்
இறுதி வாழ்க்கையென்று..
உறுதி கொள்ளும் மனதில்...
எழும் கேள்வி.....????-நான்
இருந்தாலென்ன இறந்தாலென்ன...
தயா பிரதீப்