போராட்டம்
எழுத்துமுனையில் உனை
இறுகப் பற்றிட நினைத்தாலும்..
இடைவெளிகள் எமக்குள் ..
எங்கிருந்து தொடர்கின்றது ?
இதயம் இனிக்கும்
வார்த்தைகளால்...
உளமாற உரைத்திடினும்..
அதே இதயம் வலிக்கும்...
எனை விட்டு விலகிச்சென்றிடும்..
நீ பேசாத இடைவெளியில்...!
என் தனிமையிலும்..
இனிமைதரும் -உன்
கனிந்த முகம்,
நான் காணும் வரை ..
தொடந்திடுமோ
இந்த போராட்டம்..!!
தயா பிரதீப்..