வலிகள்
விழிவழி -என்
சோகமது கண்ணீராய் ,
வழிந்தோட.....
மன வலி மட்டும்
மௌனமாய்....
இறக்காமல் இருக்கிறது.
இன்னும்...
சிறுதுளி நம்பிக்கையில்...
என் மன வலிக்கு,
மருந்து ..
நீயான போதும்.-அதை
நீ மறந்திருப்பது ...
வேடிக்கை எனினும்..- உன்
மயக்கம் தீரும் நாள் வரை..
என் விழியிலும் மனதிலும்..
வலிகளைச் சுமந்தபடி....
இவள்..!!
தயா பிரதீப்