தேடிக் கொண்டிருக்கிறேன்

கணிப் பொறியைக் காணாத
என் தலைமுறையை
முக நூலில் தேடிக் கொண்டிருக்கிறேன்
வயது அறுபதைத் தாண்டியவர்கள்
நிச்சயம் நரைக் கண்டிருப்பர்
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
என்றிருக்க வேண்டும்
அல்லது குறைந்தபட்சம்
பிள்ளைகள் துரத்திவிட்டவர்களாக இருக்கவேண்டும்
கை நீட்டாத மனிதர்களை
அரசாங்க காரியாலங்களில் தேடுவதைப் போல
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னுடைய தலைமுறை மனிதர்களை
புலம் பெயர்ந்த நான்..

எழுதியவர் : "ஜோதி" (ஜோதி ஜெயபால்) (24-Jan-15, 11:17 pm)
சேர்த்தது : ஜோதி ஜெயபால்
பார்வை : 67

மேலே