அதிகாலைப் பொழுது
கதிரவன் பொன்நிறஆடை அணிந்து இருள் அகற்றி- அவன்
செங்கதிர்கள் கொண்டு பூமாதாவை தொட்டுத்தழுவி முத்தமிடுகிறான்!!!
ஆற்றுநீர் சலசலவென பெண்ணின் கால்கொளுசு இசையுடன் மெல்ல தாய்மடி தேடி தவழ்கிறது!!
மரங்கள்யாவும் தன் வண்ண மலர் கொண்டு வாசம் வீசி சுவாசம் தந்து மந்திர புண்ணகை செய்கிறது!!!
மேகங்கள் ஒன்று சேர்ந்து போர்படை வீரர்கள் போல் நீலவானில் நீந்துகிறது!!
பறவைகள் சில்லென வீசும் காற்றிலே கானம்பாடியபடி மேகங்களுக்கிடையே சிறகடிக்கும் நேரம் வண்டுகள் மழலைமொழி பேசியவாறு பாய்கிறது மகரந்த மணம்தேடி !!
மஞ்சல் பூசி மரகதம் பூண்ட மங்கையர்கள் வாசலில் நீர்தெளித்து மாக்கோலமிடுகின்றனர்!!
ஆலய மணியோசை ஆங்காங்கே மெல்ல ஒலிக்க தொடங்குககிறது!!
ஆகா எவ்வளவு அழகானது இந்த "அதிகாலைப் பொழுது"
சுப.செந்தில்நாதன்
செங்கீரை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
