அப்பா

சிசிந்தையில் எழுந்ததை சித்திரத்தில் வடித்திட வந்த ஆண்மகனோ. ..... பெண்மான் ஈன்ற கர்ஐணை சிங்கமோ. ........
திரிதூண்டி மெருகேற்றி ஒளி சிந்தும் தார்மீக கர்ணனாய் சமுதாயத்தில். .....
வேலி என தடுக்காமல் பாரதத்தில் பாரதிக்கு நிகராய் மங்கையர்களின் எழுச்சியில். .....
முப்பரிமாண வளர்ச்சி கண்ட பூவையர் வியந்திடும் கண்ணன். ......
பிம்பமாய் கண்ணாடிகளில் பார்பவரின் பிரதிபலிப்பு. ....
துரோகம் கொண்டு கல் எறிபவர்க்கு அவரின் முகங்களே சுக்குநூறான அவதாரமாய். .......
தோல்விகளின் சறுக்கல்களில் மலை ஏறும் மாவீரன். ......
வெற்றி எனும் கிரீடம் சுமக்காத கடந்திட வேண்டிய பாதைகளின் கரடு முரடுகளை இதழோர புன்னகையோடு வரவேற்திட்ட வெற்றியாளன். ........
மார்தட்டி பெருமை கொள்கிறேன் இந்த புவிக்கு பூமகளாய் என்னை அறிமுகபடுத்திய மாமகனின் மகள் என்று சொல்வதில். .......
ஆயிரம் முறை அழைத்தாலும் ஓசை
குறையாமல் மனதின் அடி ஆழத்திலிருந்து விழுகின்றன வார்த்தைகள் " அப்பா".....என்று

எழுதியவர் : ஜெனோ (25-Jan-15, 4:05 am)
சேர்த்தது : ஜெனோ தியாகு
Tanglish : appa
பார்வை : 369

மேலே