இவையாவும்

வான் சிவந்திடும்
வண்ணங்களின் கலவையில்..
காட்சிகள் உறைபடும்
அச்சங்களின் அளவில்...

நறுமணமாகும்
உரையாடும் நொடிகள்.
நாகரீகமாகும்
நடைபாதை பூக்கள்..

அவைக்காக மீண்டும் மீண்டும்
சுவைபட்டு
சபையிலமரும் சந்தனமல்லியின்
சாமர்த்தியம்..

வசதியாய் வாழ்ந்திடும்
வண்ணங்கள் ஏழும்.
நூலாய் இளைத்திடும்
எண்ணங்கள் யாவும்..

பொழுதிங்கே விடிந்து
பொற்பாதம் பதிந்து
நகர்கின்ற மணித்துளியின்
பிரம்மாண்ட வேகம்...

சந்தோஷத்தை துளைபோடும்
சங்கீத கால்களின் சிலம்பொலி.
அண்ணாந்து முகம்பார்க்கும்
நீரோடையின் நிலவொளி...

அழுகையின் நிறம்காண
ஆவல்கொள்ளும் விழிஇமைகள்
காற்றின் முகம்கோண
பாடல்கொள்ளும் புல்வெளிகள்...

ஆலிப்பேரலையில் நீச்சலிடும்
காற்றின் வேகம்
கற்பனை பூவிடம் மெதுவாய்
சுவாசம் கொள்ளும்...

எழுதியவர் : அன்வர்தீன் (25-Jan-15, 2:47 am)
சேர்த்தது : ckவசீம்அன்வர்
பார்வை : 92

மேலே