நேர்மையின் பிணங்கள் - இராஜ்குமார்
நேர்மையின் பிணங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~
உழவரின் உடைமை உடைந்து
இதயம் இருண்டு பிளந்தது
அவரின் நிலங்களாய் ..
விழிப்புணர்வின் சாரலில்
விழிகளைத் திறந்தவனுக்கு
வழிகள் மூடுவதோடு - அவன்
பாதமும் எரிகிறது - சிலரின்
பணக் குவியலில் ...
சத்தியம் கேட்ட
சட்டத்தின் தாள்களில்
தவறுகளே தப்பிக்கின்றன
துரத்தும் பிழைகளால்
தூங்காத இரவுகளில்
தூக்கில் பிறந்தவை
நேர்மையின் பிணங்கள் ...
- இராஜ்குமார்

