இந்தியா ஷைனிங்

INDIA SHINING
இந்தியா ஷைனிங்

பிச்சைகாரன்
கையை நீட்ட
அசட்டு சிரிப்புடன்
பையை துழாவி
இல்லை சில்லறை
என்ற போது
புன்சிரிப்புடன்
பிச்சைக்காரன்
இவ் அவல நிலை
உன்னோடு இல்லை
நாடு முழதும்
இதுவே தொல்லை
காசோலையும்
சிறு , பெரு நோட்டும்
டாலர், யூரோ,
பவுண்ட், யென்னும்,
கிரெடிட் கார்டும்
எம்மிடம் செல்லும்
என்றென கூற
பிச்சைகாரன்
அவனா , நானா
என்ற கேள்விற்கு
நான் பதில் தேட
தடுக்கி விழுந்து
நிலை தடுமாறி
பல காத தூரம்
பறந்தோடி சென்றேன்!


எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 4:45 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 269

மேலே