காதலியே
கண்ணே கருங்குயிலே...
பொன்னே பூங்குயிலே...
என் அமுதே ஆருயீரே...
என் உலகம் நீதானே...
என் வாழ்வும் நீதானே...
என் மூச்சும் நீதானே...
விதியை தாண்டி வாழ்கிறேன் பெண்ணே...!
உன்னை தேடி அலைவதினாலே...
இமைகள் மட்டும் என்னுள் இருக்க
கண்கள் இரண்டும் உன்னை தேட...
வெய்யிலில் நனைந்து, மழையில் எரிகிறேன்
விழிகள் உன்னை காணும்வரை பெண்ணே...!
வாழ்வின் அர்த்தம் தறிகெட்டு போக
வாழ்வே நீயென அலையுது நெஞ்சம்...
பூமி பந்தையே புரட்டி போட்டவன்
பெண்ணின் விழியில் சிக்கித்திளைக்கிறேன்...
வானமும் உனக்கு-வையமும்
உனக்கு அள்ளிதந்த மூடன் நானோ...!
என் விழிகளில் வாழ்கிறாய் பெண்ணே
இமை மூட தவிக்கின்றேன் நானடி...!
மெல்ல களைந்ததடி உன் கானல் பிம்பம்
மெல்ல உடைவது ஏனோ என் நெஞ்சம்...!
காதலில் தோற்றவனின் கதைகேள் பெண்ணே
கருவறை கரு கூட கலங்குமடி...!
காதலில் விதிசெய்தாய் பெண்ணே
வெல்வதும், வீழ்வதும்-உன் அன்பில் கண்ணே...!
காதலில் தோல்விகள் புதிதல்ல
காதலே தோற்ற சரித்திரம் உண்டோ...
உன் நினைவினில் வாழ்ந்த காலங்கள் போதும் அன்பே
உன் நிழலில் வாழ வரம் தருவாயா பெண்ணே...!
நான் போகும் முன்னே ஒருமுறை பாரடி
உன் நினைவினில் நான் வாழ்ந்திட அதுபோதும்...!
கண்ணே கருங்குயிலே...
பொன்னே பூங்குயிலே...
என் அமுதே ஆருயீரே...
என் நினைவும் நீதானே...
என் உறவும் நீதானே...
என் உயிரும் நீதானே...
- அ.பெரியண்ணன்