மறுபடி பூ
மாற்றாய் வா
மலையாய் வாழ்
ஊற்றாய் நிலை
உள்ளம் நுழை
விற்றல் களை
வழங்கித் திளை
ஏற்றம் இணை
எவரும் காண்
குற்றம் ஓர்
குறையென்(று) என்
தோற்றம் பிரி
தோகை விரி
சுற்றும் பார்
சுமையில் பார்
காற்றில் கல்
கரையும் செய்
நேற்றைப் போல்
நிசங்கள் மீள்
மனிதம் பூ
மறுபடி பூ !
_______________________________________________________________
அன்பர்கள் நண்பர்கள் யாவருக்கும் குடியரசு தின நல் வாழ்த்துக்கள் !
வாழ்க வளமுடன்